புதுடெல்லி,ஜன.12:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை விபரங்கள் தற்போது பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைக்காது.
தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) விசாரணையை பூர்த்திச் செய்யவில்லை என பாகிஸ்தானுக்கு புரிய வைக்கவேண்டுமென உள்துறை அமைச்சகம் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்புத் தொடர்பாக எந்த விசாரணை விபரங்களையும் ஒப்படைப்பது உகந்தது அல்ல என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணை முடிவடைந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ஹிந்துக்களுக்கு பங்குள்ளது குறித்து அஸிமானாந்தா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய ஹைக்கமிஷனரை அழைத்து, வழக்கு விசாரணை விபரங்களை விரைவில் ஒப்படைக்க வேண்டுமென கோரியிருந்தது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் பலியான 68 பேர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சம்ஜோதா குண்டுவெடிப்பு:விசாரணை விபரம் பாகிஸ்தானிடம் தற்போது ஒப்படைக்கப்பட மாட்டாது"
கருத்துரையிடுக