லண்டன்,ஜன.22:முன்னாள் ஈராக் அதிபரும், அமெரிக்க கைக்கூலிகளால் தூக்கிலிடப்பட்ட சதாம் ஹுசைன் எழுதிய நாவல் ஹாலிவுட்டில் திரைப்படமாக தயாரிக்கப்படவிருக்கிறது.சதாமின் 'ஸபீபாவும் மன்னரும்' என்ற காதல் நாவலை பாரமவுண்ட் நிறுவனம் திரைப்படமாக தயாரிக்கிறது.
2000 ஆம் ஆண்டு வெளியான இந்நாவல் சாதாரண பெண்ணான ஸபீபாவுடன் மத்திய கால ஆட்சியாளர் ஒருவர் காதல் வயப்படுவதை கூறுவதாகும். இந்நூல் அதிகளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
பாரமவுண்ட் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகை சச்சா பரோன் கோஹெனை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சன் ஆன்லைன் தெரிவிக்கிறது.
'ப்ரூனோ' 'பாரக்' திரைப்படங்களின் இயக்குநர் லாரி சார்ல்ஸ் இத்திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "சதாம் ஹுசைனின் நாவல் திரைப்படமாகிறது"
கருத்துரையிடுக