ஸாண்டியாகோ,ஜன.9:ஏராளமான லத்தீன் அமெரிக்க நாடுகள் ஃபலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரித்து வருகின்றன. அவ்வரிசையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியும் ஃபலஸ்தீனை சுதந்திர இறையாண்மை மிக்க நாடாக அங்கீகரித்ததாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆல்ஃப்ரட் மொரீனோ அறிவித்துள்ளார்.
வருகிற மார்ச் மாதம் சிலி அதிபர் ஃபலஸ்தீனுக்கும்,இஸ்ரேலுக்கும் சுற்றுப்பயணம் செல்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரேசில், அர்ஜெண்டினா, பொலிவியா, ஈக்வடார் ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு ஃபலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரித்திருந்தது. உருகுவே நாடும் இவ்வாண்டு ஃபலஸ்தீனை அங்கீகரிக்கப் போவதாக அறிவித்திருந்தது.
அதேவேளையில், ஃபலஸ்தீன் எல்லையைக் குறித்த எவ்வித கருத்தையும் சிலி தெரிவிக்கவில்லை. கியூபா, நிகரகுவா, வெனின்சுலா, கோஸ்டா ரிகா ஆகிய நாடுகள் ஏற்கனவே ஃபலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரித்திருந்தன.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன் இறையாண்மை மிக்க நாட - சிலி அங்கீகாரம்"
கருத்துரையிடுக