9 ஜன., 2011

அணுசக்தி விஞ்ஞானிகளை கொலைச் செய்வதன் மூலம் ஈரானின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது - ஈரான் நீதித்துறை துணைத் தலைவர் பேச்சு

டெஹ்ரான்,ஜன.9:எங்களின் அணு விஞ்ஞானிகளை கொலைச் செய்வதன் மூலம் ஈரானின் முன்னேற்றத்தை சியோனிஸ்டுகளால் தடுக்க முடியாது என அந்நாட்டின் நீதித்துறை துணைத்தலைவர் ஸய்யித் இப்ராஹீம் ரயீஸி தெரிவித்துள்ளார்.

ஒரு வருடம் முன்பு கொல்லப்பட்ட ஈரான் அணு விஞ்ஞானி மஸூத் அலி முஹம்மதி, 40 தினங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட மஜீத் ஷஹரியாரி ஆகிய விஞ்ஞானிகளின் நினைவு நிகழ்ச்சியில் உரையாற்றினார் ரயீஸி.

இரண்டு விஞ்ஞானிகளையும் கொலைச் செய்ததன் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக ரயீஸி குற்றஞ்சாட்டினார். விஞ்ஞானிகளின் கொலைகளைக் குறித்து சட்ட நடவடிக்கைகள் துவங்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி ஈரானின் அணு விஞ்ஞானி மஜீத் ஷஹரியாரி காரில் சென்றுக் கொண்டிருக்கும் வேளையில் அவருடைய கார்மீது மர்மக்கும்பல் ஒன்று வெடிக்குண்டை வீசியது. இதில் சம்பவ இடத்தில் மஜீத் ஷஹரியாரி கொல்லப்பட்டார். அவருடன் பயணித்த இன்னொரு ஈரான் விஞ்ஞானியான டாக்டர்.அப்பாஸியும் அவருடைய மனைவியும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெஹ்ரான் பல்கலைக்கழக பேராசிரியரான அலி முஹம்மதி கொல்லப்பட்டார். இவரும் குண்டுவீச்சு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.

இஸ்ரேலிய பயங்கரவாத உளவுப் பிரிவான மொஸாதின் உத்தரவின்படி இக்கொலைகள் நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது என ஈரான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரசு அதிகாரிகள்,எம்.பிக்கள்,விஞ்ஞானிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரைநிகழ்த்தினர்.

விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மது வாஹித் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அணுசக்தி விஞ்ஞானிகளை கொலைச் செய்வதன் மூலம் ஈரானின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது - ஈரான் நீதித்துறை துணைத் தலைவர் பேச்சு"

கருத்துரையிடுக