பத்தணம்திட்டா,ஜன.9:கேரள மாநிலம் பத்தணம் திட்டா மாவட்டத்தில் முளகுளா என்ற இடத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட அஞ்சலி கிருஷ்ணா(வயது 22) என்ற பெண்ணின் மீது பைக்கில் வந்த இளைஞர்கள் ஆசிட் வீசினர். இதில் கடுமையாக காயமடைந்த அவர் கவலைக்கிடமான சூழலில் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை(8/01/2011) ஒன்பதரை மணிக்கு பைக்கில் வந்த இரு இளைஞர்கள் அஞ்சலியின் வீட்டில் போன் செய்து ஒரு பார்ஸல் கொரியரில் வந்திருப்பதாகவும், வீடு தெரியாததால் வெளியே வந்து நிற்கவும் என கூறியுள்ளனர்.
உறவினர்கள் ஏதேனும் பார்ஸல் அனுப்பியிருக்கலாம் எனக்கருதி அஞ்சலியும் அவருடைய தாயாரும் வீட்டிற்கு வெளியே வந்து நின்றுள்ளனர். அவ்வேளையில் பைக்கில் வந்த இரு இளைஞர்கள் அக்கிரமமான முறையில் அஞ்சலியின் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளனர். பின்னர் அவ்விளைஞர்கள் பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். சப்தம் கேட்டு ஓடிவந்த ஊர்வாசிகள் கடுமையாக காயமடைந்த அஞ்சலியை திருவல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பின்னர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிட்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆசிரியர் பயிற்சியை முடித்த அஞ்சலி முளகுளா என்ற இடத்தில் சரஸ்வதி வித்யாபீடம் என்ற பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வருகிற ஞாயிற்றுக்கிழமை அஞ்சலியின் திருமணம் நடக்கவிருக்கையில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுத் தொடர்பாக அப்பகுதி போலீசார் உடனடியாக விசாரணையை துவக்கினர். இந்த அக்கிரம சம்பவம் தொடர்பாக முளகுளா உள்ளூர் பா.ஜ.க தலைவர் வி.எஸ்.பிஜு என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவுச் செய்துள்ளனர். கடந்த பஞ்சாயத்து தேர்தலில் இவர் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "திருமணம் நிச்சயித்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு - உள்ளூர் பாஜக பிரமுகரை போலீஸ் தேடுகிறது"
கருத்துரையிடுக