8 ஜன., 2011

வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனி வாரியம் - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,ஜன.8:தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்தினார். அதில் அவர் பல்வேறு திட்டங்களைப் பற்றி தெரிவித்தார்.

அதில் வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனி வாரியம் அமைக்கப்படுமென தெரிவித்தார். அதிகமான காசு செலவுச் செய்து வளைகுடா நாடுகளில் வேலைத்தேடி வரும் தமிழர்களில் பலர் குறைந்த சம்பளத்தில் வேலைப்பார்த்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் வெளிநாட்டிற்கு வர விசாவுக்காக செலவுச் செய்த பணத்தை அடைக்க மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் சூழல். இந்நிலையில் பல ஆண்டுகள் பாலை மணலில் தமது இளமையை தொலைத்துவிட்டு நோய்களுடன் ஊர் போய் சேரும் அவல நிலையும் நீடிக்கிறது.

ஊருக்குச் சென்றால் என்ன வேலை செய்வது என திணறும் சூழலும் வாழ்க்கையை ஓட்டுவதற்கு சிரமத்திற்கு ஆளாகும் நிலைமையும் தொடரத்தான் செய்கிறது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெளிநாடுகளில் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வரும் தமிழக மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனி வாரியம் - தமிழக அரசு அறிவிப்பு"

கருத்துரையிடுக