24 ஜன., 2011

வரதட்சணை கொடுமை:நீதிபதி மீது புகார்

ராஜ்கோட்,ஜன.24:நீதிபதி ஒருவருக்கெதிராக வரதட்சணை கொடுமை வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் தாவேயின் மீது இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வரதட்சணைக்கோரி மகனின் மனைவியை நீதிபதி கொடுமைப்படுத்தினார் என்பதுதான் அந்த புகார். தர்ஸனா தாவே என்ற பெண்மணி தனது கணவர் கின்னார், மாமியார் பிரதீபா, கணவரின் சகோதரன் பிரசாந்த், மாமனார் அரவிந்த் தாவே ஆகியோர் மீது வரதட்சணைக்கோரி கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு தர்ஸனாவுக்கும், கின்னாருக்கும் திருமணம் நடந்தது. திருமணமான துவக்கத்திலேயே வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், 10 லட்சம் ரூபாய் வரதட்சணைக் கேட்டு தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து உதைத்ததாக தர்ஸனா போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.

மேலும், சில மாதங்களுக்கு முன்னர் தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு தனது கணவர் விவகாரத்திற்கு முயல்வதாகவும் தர்ஸனா அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நீதிபதிக்கெதிராக தொடுக்கப்படும் இரண்டாவது வரதட்சணை கொடுமை புகாராகும் இது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வரதட்சணை கொடுமை:நீதிபதி மீது புகார்"

கருத்துரையிடுக