24 ஜன., 2011

டாக்டர் சென்னின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று. விசாரணையை கண்காணிக்க அனுமதிக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன்

புதுடெல்லி,ஜன.24:அநியாயமாக தேசத்துரோக குற்றஞ்சாட்டி, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னின் மேல்முறையீட்டு மனுவை சட்டீஷ்கர் உயர்நீதிமன்றம் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது.

மேல்முறையீட்டு மனு விசாரணையை கண்காணிக்க தங்கள் பிரதிநிதிகளை அனுமதிக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, ஹங்கரி,பிரான்சு, சுவீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகளை நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கோரியதாக ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

சென்னின் சிறைத் தண்டனைக் குறித்து தங்களது கவலையை இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும் அக்குழு தெரிவிக்கிறது.

ஐரோப்பிய யூனியனின் கோரிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கும் சட்டீஷ்கர் மாநில அரசுக்கும் அளித்துள்ளது.

சட்டீஷ்கர் முதல்வர் ரமண் சிங் இதுத் தொடர்பான விபரங்களை உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை விதித்தைக் கண்டித்து இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டாக்டர் சென்னின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று. விசாரணையை கண்காணிக்க அனுமதிக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன்"

கருத்துரையிடுக