9 ஜன., 2011

குண்டுவெடிப்புகளை மூடிமறைக்க மேலும் கொலைகள்: ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதம்

புதுடெல்லி,ஜன.9:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் திட்டமிட்டு நடத்திய குண்டுவெடிப்புகளை மறைப்பதற்கு மேலும் கொலைகளை நிகழ்த்தியதாக ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை கண்டறிந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்புகளுக்கான பொறுப்பை சுனில் ஜோஷியிடம் ஒப்படைத்திருந்தது. குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பிறகு அவற்றில் முக்கிய பங்காற்றிய சுனில் ஜோஷியால் தங்களது ரகசியங்கள் வெளியாகிவிடுமோ என அஞ்சிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் அவரை கொலைச் செய்தது.

இந்நிலையில், சுனில் ஜோஷியின் நெருங்கிய நண்பரும், மத்தியபிரதேச மாநிலத்தைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான ராம்ஜி என்ற ராமபிரசாத் கலோடா அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு தேவையான குண்டுகளை சுனில் ஜோஷியிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் ராம்ஜியின் உடல் கடந்த 2008 மார்ச் மாதம் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் கவுதம்புரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரெயில் தண்டவாளத்தில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வேளையில் அவரைக் கொன்றது யார் என்பது தெரியவில்லை.

தற்பொழுது இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் தங்களது பின்னணி வெளியாகிவிடுமோ என அஞ்சி சுனில் ஜோஷியை கொன்ற விபரத்தை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கண்டறிந்தது.

இதனைத் தொடர்ந்து அஜ்மீர் குண்டுவெடிப்பை விசாரித்துவரும் ராஜஸ்தான் மாநில ஏ.டி.எஸ் ராம்ஜியைக் கொன்றதன் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது. தொடர் விசாரணையில் இந்த உண்மை தெரியவரும் என கருதப்படுகிறது.
மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குண்டுவெடிப்புகளை மூடிமறைக்க மேலும் கொலைகள்: ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதம்"

கருத்துரையிடுக