9 ஜன., 2011

விக்கிலீக்ஸுடன் தொடர்புடைய நபர்களின் தகவல்களை ஆஜர்படுத்த ட்விட்டருக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன்,ஜன:விக்கிலீக்ஸுடன் தொடருடைய நபர்களின் தனிப்பட்ட விபரங்களை ஆஜர்படுத்த அமெரிக்க நீதிமன்றம் சமூக வலையமைப்பான ட்விட்டருக்கு உத்தரவிட்டுள்ளது.

பயனீட்டாளர் பெயர், முகவரி, கனெக்சன் பதிவுகள், தொலைபேசி எண்கள், பணம் அடைத்ததற்கான விபரங்கள் ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டுமென ட்விட்டருக்கு அமெரிக்காவின் வெர்ஜீனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸான்ஜ், அமெரிக்க ராணுவவீரர் பிராட்லி மானிங், ஐஸ்லாந்து நாட்டின் ஒரு எம்.பி ஆகியோரின் விபரங்கள் நீதிமன்றம் ஒப்படைக்க உத்தரவிட்டவைகளில் உட்படும்.

விக்கிலீக்ஸிற்கு அமெரிக்கா தொடர்பான விபரங்களை கசியச் செய்தது பிராட்லி மானிங் என கருதப்படுகிறது. பிராட்லி மானிங் தற்பொழுது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

விக்கிலீக்ஸ் தொடர்பாக அமெரிக்கா நடத்திக்கொண்டிருக்கும் விசாரணையில் ட்விட்டர் வசமுள்ள விபரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறியதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இத்தகையதொரு உத்தரவு வந்ததை எவரிடமும் தெரிவிக்கக் கூடாது என ட்விட்டருக்கு அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால், நீதிமன்றம் விபரங்களை தாக்கல் செய்ய கட்டளையிட்ட நபர்களில் ஒருவரான ஐஸ்லாந்து நாட்டு எம்.பியான பிர்கிட்டா ஜோன்ஸ்டோட்டிர் இவ்விபரத்தை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

நவம்பர் 2009-ஆம் ஆண்டு முதல் தான் ட்விட்டரில் போஸ்ட் செய்ய அளித்த அனைத்து விபரங்களையும் தாக்கல்செய்ய கோரியுள்ளது அமெரிக்க நீதிமன்றம் என முன்னர் விக்கிலீக்ஸுடன் ஒத்துழைத்த பிர்கிட்டா தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸுடன் தொடர்புடைய நபர்களின் தகவல்களை ஆஜர்படுத்த ட்விட்டருக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு"

கருத்துரையிடுக