ஃபலஸ்தீன் ஆணையத்தின் அதிபரும் ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக கருதப்படும் யாஸிர் அரஃபாத்தின் வழித் தோன்றலான மஹ்மூத் அப்பாஸ் ஒரு அமெரிக்க-சியோனிச கைப்பாவை என்பதைக் குறித்து எவருக்கேனும் சந்தேகமிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.
கத்தர் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட ரகசிய ஆவணங்கள், உலகில் சட்டம், நீதியில் நம்பிக்கை வைத்திருக்கும் எவராலும் கனவு கூட காணமுடியாத கொடூரமான சதியை மஹ்மூத் அப்பாஸ் செய்துள்ளார் என்பதை நிரூபிக்கின்றன.
மூன்று மதத்தினரும் புனித ஸ்தலமாக கருதும் ஜெருசலத்தை முற்றிலும் சியோனிச பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்க ஃபலஸ்தீன் ஆணையம் ஒப்புக்கொண்ட விபரங்கள்தான் அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டது.
ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தை முறியடிக்க இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் யாஸிர் அரஃபாத் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து பஹாயி மதத்தைச் சார்ந்தவர் எனக் கருதப்படும் மஹ்மூத் அப்பாஸ் என்ற குள்ளநரி ஃபலஸ்தீன் ஆணையத்தின் அதிபராக பதவியேற்றார்.
சி.ஐ.ஏ மற்றும் மொஸாதின் ஏஜண்டுகள் அடங்கிய பாதுகாப்புப் படைதான் மஹ்மூத் அப்பாஸையும், பிரதமர் ஸலாம் ஃபய்யாத் உள்ளிட்ட துரோகிகளை பாதுகாத்து வருகிறது.
ஹமாஸின் தலைமையிலான சுதந்திரப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க ஃபத்ஹ் போலீசாருக்கு சம்பளம் கொடுப்பதும் அமெரிக்க-சியோனிஷ பயங்கரவாதிகள்தான். இதர அரபு நாடுகளை விட ஃபலஸ்தீனின் மேற்கு கரையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்தே வருகின்றன.
வயதான தலைவர்களைக் கொண்ட ஃபலஸ்தீன் ஆணையம் 30 வெள்ளிக்காசுக்கு ஃபலஸ்தீன் மக்களின் உரிமைகளை இஸ்ரேலுக்கு விற்க துணிந்ததால் ஃபலஸ்தீன் ஆணைய அதிகாரிகளை வெளியேற்றிவிட்டு தேர்தலில் பெரும்பான்மை பெற்ற ஹமாஸ் இயக்கம் காஸ்ஸாவின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வந்தது.
காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் அவரது கூட்டாளிகளின் ஆதரவு கிடைத்தே வந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு இறுதியில் காஸ்ஸாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பாஸ்பரஸ் குண்டுகளை வீசிக் கொலைச் செய்ததுடன், நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்களையும், வீடுகளையும் தகர்த்த இஸ்ரேலின் அடாவடித்தனமான தாக்குதலுக்கு மஹ்மூத் அப்பாஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
அரபு உலகில் சொந்த நாட்டு மக்களை காட்டிக் கொடுத்த நயவஞ்சக ஆட்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள மஹ்மூத் அப்பாஸை விரைவில் ஃபலஸ்தீனை விட்டு வெளியேற்றுவது அந்நாடு சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு மிக அத்தியாவசியமானதாகும்.
எத்தகைய அழுத்தங்களையும், துயரங்களையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்தான் ஃபலஸ்தீன மக்கள். இத்தகைய காட்டிக் கொடுக்கும் துரோகிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற தயங்கமாட்டார்கள் அவர்கள். எதிரிகளின் கைக்கூலிகளுக்கும், நாசகர சக்திகளுக்கும் எதிராக அயராமல் போராடவும், தியாகங்களை புரிவதற்கும் தயாரான சமூகம் என்பதை ஃபலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாக நிரூபித்து வருகின்றார்கள். ஆகவே மஹ்மூத் அப்பாஸ் போன்றவர்களை எதிர்கொள்வது அவர்களுக்கு பெரிய விஷயமே இல்லை. உலக வரலாற்றில் துரோகிகளுக்கு எவ்வித மதிப்புமில்லை.

விமர்சகன்
0 கருத்துகள்: on "துரோகத்தின் மறுபெயர் மஹ்மூத் அப்பாஸ்"
கருத்துரையிடுக