27 ஜன., 2011

ஜம்முகஷ்மீரில் கொடியேற்ற பா.ஜ.கவின் முயற்சி ஆர்.எஸ்.எஸ்ஸின் குண்டுவெடிப்புத் தொடர்புகளை திசை திருப்புவதற்கான நாடகம் - காங்கிரஸ் கட்சி

புதுடெல்லி,ஜன.27:ஸ்ரீநகரை நோக்கிய பா.ஜ.கவின் ஏகதா யாத்திரை இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை திசை திருப்புவதற்கான நாடகம் என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான உத்தரவாதத்துடன் அம்மாநில அரசு பா.ஜ.க தொண்டர்களை தடுத்து நிறுத்தியதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுத் தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷக்கீல் அஹ்மத் விடுத்துள்ள அறிக்கையில், பாரதீய ஜனதாவின் இளைஞர் பிரிவான யுவமோர்ச்சா குடியரசு தினத்தன்று ஸ்ரீநகரின் லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்ற முயல்வது, நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டுள்ளதால் ஏற்பட்ட அவமானத்தை மறைப்பதற்கான முயற்சியாகும்.

பா.ஜ.க தலைவர்கள் இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை ஏகதா யாத்திரையின் பெயரால் மீற முயன்றுள்ளனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி ஒரு மாநிலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது அம்மாநிலத்தின் உரிமையாகும். சட்டம் ஒழுங்கு மீறப்படாமலிருக்க போதுமான நடவடிக்கைகளை ஜம்மு-கஷ்மீர் மாநில அரசு எடுத்துள்ளது.

1950, ஜனவரி 26 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை கொலைச்செய்ய பா.ஜ.க விரும்புகிறது. மேலும் குடியரசு தின உணர்வினை கொலைச்செய்ய விரும்புகிறது. தங்களின் குறுகிய நோக்கங்களுக்காக பா.ஜ.க தலைவர்கள் தேசிய கொடியை தவறாக பயன்படுத்துகின்றனர்.

கஷ்மீர் ஒரு கொந்தளிப்பான பகுதியாகும். அம்மாநில அரசு அங்கு அமைதியை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறது. தங்களது அரசியல் விளையாட்டுக்காக தேசிய கொடியை பயன்படுத்துவோரை மக்கள் தண்டிப்பார்கள்.

முன்னாள் பா.ஜ.க தலைவர் முரளி மனோகர் ஜோஷி 1992-ஆம் ஆண்டு பலத்த ராணுவ பாதுகாப்பிற்கு மத்தியில் லால்சவுக்கில் கொடியேற்றும் பொழுது பயத்தில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றினார். அப்பொழுது அவர் பா.ஜ.கவின் 3-வது பெரிய தலைவராக மதிக்கப்பட்டார். தற்பொழுது அவர் பா.ஜ.கவின் முதல் 10 தலைவர்களில் கூட இல்லை.

முன்பு மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வர் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் தேசியக்கொடியை தடை உத்தரவையும் மீறி கொடி ஏற்றிவிட்டு அவர் ஆற்றிய உரை வகுப்புக் கலவரத்தை அம்மாநிலத்தில் உருவாக்கியது. இன்று அவர் பா.ஜ.கவின் தலைவர் பதவியை மட்டுமல்ல தனது அரசியல் மறுவாழ்வுக்கான வாய்ப்பையும் இழந்துவிட்டார். இவ்வாறு ஷக்கீல் அஹ்மத் தெரிவித்தார்.

செய்தி:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜம்முகஷ்மீரில் கொடியேற்ற பா.ஜ.கவின் முயற்சி ஆர்.எஸ்.எஸ்ஸின் குண்டுவெடிப்புத் தொடர்புகளை திசை திருப்புவதற்கான நாடகம் - காங்கிரஸ் கட்சி"

கருத்துரையிடுக