டிரானா,ஜன.23:அல்பேனியா தலைநகரான டிரானாவில் போலீசாருக்கும் எதிர்கட்சி தொண்டர்களுக்குமிடையே நடந்த மோதலில் 3பேர் கொல்லப்பட்டனர்.
அரசு ராஜினாமாச் செய்ய வேண்டுமெனக்கோரி 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அரசு தலைமையகத்திற்கு வெளியே கண்டனப் பேரணியை நடத்தினர்.
ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான துணைப்பிரதமர் இலிர் மேலா ராஜினாமாச் செய்யவேண்டுமென எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஊழல் நிறைந்த அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், கடந்த தேர்தலில் முறைகேடுகளை நடத்தியதாகவும் சோசியலிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகளை எதிர்கட்சியினர் ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து அல்பேனியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவி வருகிறது.
கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு தலையிலும், இதர நபர்களுக்கு நெஞ்சிலும் துப்பாக்கிக் குண்டுகள் தாக்கியுள்ளதாக டிரானா ராணுவ மருத்துவமனை இயக்குநர் ஆல்ஃப்ரட் கிஜா தெரிவித்துள்ளார்.
30க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களுக்கும், 17 போலீசாருக்கும் காயமேற்பட்டுள்ளது. ஒரு சாதாரண நபரும், போலீஸ்காரரும் கவலைக்கிடமாக இருப்பதாக ஆல்ஃப்ரட் தெரிவிக்கிறார் .பொதுமக்கள் போலீசார் மீது கல்வீச்சு நடத்தியதைத் தொடர்ந்து போலீசார் மக்கள் கூட்டத்தின் மீது தண்ணீரை பாய்ச்சினர். மேலும் கண்ணீர் புகைக்குண்டுகளும் உபயோகப்படுத்தப்பட்டன என நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிபர் பாமிர் டோபி மற்றும் சோசியலிச கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அல்பேனியா:போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு - மூன்று பேர் பலி"
கருத்துரையிடுக