பெர்லின்,ஜன.31:வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் நான்கு ஜெர்மன் நாட்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் சாலை அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறியதாக பிரஸ் டிவி கூறுகிறது.
இக்குண்டுவெடிப்பிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபீஉல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார். தங்களின் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை ஜெர்மனியும் உறுதிச்செய்துள்ளது. இத்துடன் இந்த ஆண்டு ஆப்கானில் கொல்லப்படும் வெளிநாட்டு ராணுவத்தினரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படையில் ஏறத்தாழ 4700 ஜெர்மனி ராணுவத்தினர் பணியாற்றுகின்றனர். ஆப்கானிஸ்தானில் ஜெர்மனியின் சேவையை மேலும் ஒருவருடத்திற்கு நீட்டுவதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் அளித்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆப்கான்:நான்கு ஜெர்மனி ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்"
கருத்துரையிடுக