12 ஜன., 2011

எனது நூல்களை ஈரான் தடைச்செய்துள்ளது - பிரபல எழுத்தாளர் பவ்லோ கொய்லோ

ரியோடிஜெனீரா,ஜன.12:ஈரான் அரசு எனது நூல்களுக்கு தடை ஏற்படுத்தியுள்ளது என பிரபல எழுத்தாளர் பவ்லோ கொய்லோ தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்.

ஈரானில் தனது எடிட்டர் இதனை தெரிவித்ததாக கொய்லோ கூறுகிறார். பிரேசில் அரசு இதில் தலையிடவேண்டும் என கொய்லோ கோரிக்கை விடுத்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலைத் தொடர்ந்து ஈரானில் நடந்த வன்முறைகளில் சில வீடியோ காட்சிகள் கொய்லோவின் எடிட்டர் அராஷ் ஹிஜாஸியும் காணப்பட்டார். எதற்காக தனது நூல்களை ஈரான் தடைச்செய்துள்ளது என தனக்கு தெரியாது என கொய்லோ கூறுகிறார்.

ஆனால் சமூக இணையதளங்களில் ஹிஜாஸிக்கு ஆதரவு தெரிவித்ததை சுட்டிக்காட்டுகிறார்.

உலகம் முழுவதும் வாசகர்களைக் கொண்ட பிரபல எழுத்தாளரான கொய்லோவை 1988 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆல்கெமிஸ்ட் என்ற நூல் உலக அளவில் பிரபலமாக்கியது.

56 மொழிகளில் 150 நாடுகளில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. எல்லா மொழிகளிலும் சேர்த்து ஆல்கெமிஸ்டின் 430 லட்சம் பிரதிகள் விற்றதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஈரான் மொழியான பார்ஸியிலும் இந்நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எனது நூல்களை ஈரான் தடைச்செய்துள்ளது - பிரபல எழுத்தாளர் பவ்லோ கொய்லோ"

கருத்துரையிடுக