லண்டன்,ஜன.12:மத அவமதிப்புச் சட்டத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்த பஞ்சாப் மாகாண கவர்னர் ஸல்மான் தஸீரை சுட்டுக்கொன்றதற்கு பாராட்டும் நடவடிக்கைக்கு எதிராக மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ கருத்துத் தெரிவித்துள்ளார்.
தஸீரின் கொலையாளியை புகழ்பவர்கள்தாம் உண்மையான மத அவமதிப்பாளர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை லண்டனில் பாகிஸ்தான் ஹைக்கமிஷனில் நடந்த தஸீர் மரணம் தொடர்பான இரங்கல் கூட்டத்தில் பிலாவல் இதுத்தொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.
மத அவமதிப்பின் மறைவில் அமைதியான மார்க்கத்தை களங்கப்படுத்தும் இவர்களை தோல்வியடையச் செய்யவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவர்களுக்கும், இதர பிரிவினர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
கடந்த வாரம் பஞ்சாப் கவர்னர் ஸல்மான் தஸீர் தனது மெய்க்காப்பாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கவர்னரை சுட்டுக்கொன்ற மாலிக் மும்தாஸ் ஹுசைன் காதிரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொழுது வழக்கறிஞர்கள் உள்பட ஏராளமானோர் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.
மத அவமதிப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதை எதிர்த்து கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் 50 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர். அதேவேளையில் பாகிஸ்தானில் மத அவமதிப்புச் சட்டத்தை தடைச்செய்ய வேண்டுமென கோரிய போப் பெனடிக்டின் நடவடிக்கையை பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் லியாகத் பலூச் கண்டித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "தஸீரின் கொலையாளியை ஆதரிப்பவர்கள்தாம் மதத்தை அவமதிப்பவர்கள் - பிலாவல் பூட்டோ"
கருத்துரையிடுக