30 ஜன., 2011

இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்புக் கருவியை பொருத்திய அமெரிக்க போலீசார்

புதுடெல்லி,ஜன.30:அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பதற்கு அந்த நாட்டு அரசிடம் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு போலி விசா வழங்கிய குற்றச்சாட்டின்பேரில் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள திரி-வேலி பல்கலைக்கழகத்தில் அமெரிக்க போலீஸாரும், குடியேற்றத் துறை அதிகாரிகளும் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சுமார் 1,555 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களில் 95 சதவீதம் பேர் இந்தியர்கள்.

இந்நிலையில், இந்திய மாணவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் அவர்களின் கால்களில் ரேடியோ அதிர்வலைகள் கொண்ட கருவியை அமெரிக்க போலீஸார் பொருத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகங்கள் மூலமாகவே இந்திய மாணவர்கள் விசா பெற்றுள்ளனர். உரிய விசாரணைக்குப் பின்னரே அவர்கள் திரி-வேலி பல்கலைக்கழகத்திலும் சேர்க்கப்பட்டுள்ளனர். போலி விசா விவகாரத்தில் இந்திய மாணவர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் யாரும் விசா நடைமுறைகளையோ, குடியேற்ற விதிகளையோ மீறவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய்நாட்டுக்கு திரும்ப விரும்பும் மாணவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மனித உரிமைகளுக்கு உள்பட்டே இந்திய மாணவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர்களின் கால்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் தூதரகம் மூலமாக வழங்கப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்புக் கருவியை பொருத்திய அமெரிக்க போலீசார்"

Mohamed Ismail MZ சொன்னது…

@adithadi
அதிரடி அடிதடி

அமெரிக்காவில் கால்கட்டு போடப்பட்ட மாணவருக்காக கூப்பாடு, கட்டுமரத்தில் கட்டப்பட்ட/சுடப்பட்ட மீனவருக்கு நோ சப்போர்ட்டு #TNFisherman #media (I found this tweet today)

கருத்துரையிடுக