4 ஜன., 2011

விலைவாசி உயர்வைக் கண்டித்து தேசிய பெண்கள் முன்னணி பேரணி

திருவனந்தபுரம்,ஜன.4:மக்களை வாட்டும் அத்தியாவசியப் பொருட்களின் எதிர்பாராத விலைவாசி உயர்வைக் கண்டித்து தேசிய பெண்கள் முன்னணி(NWF) சார்பாக கண்டனப் பேரணி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தலைமைசெயலகம் முன்பு நடந்தது. இப்பேரணிக்கு தலைமைத் தாங்கி உரை நிகழ்த்தினார் மாநில NWF-ன் தலைவியான ஆசிரியை ரைஹானத்.

அப்பொழுது அவர் தெரிவித்ததாவது: 'நாட்டில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை பெரும் வியாபார சக்திகள் தீர்மானிக்கின்றன. அரசு இத்தகைய வியாபார சக்திகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்துவருகிறது. இதனால் சாதாரண மக்களின் வாழ்க்கை துயரமாக மாறியுள்ளது.

மத்திய,மாநில அரசுகள் விலைவாசி உயர்வை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். NWF இதனை எதிர்த்து வலுவாக போராடும். மேலும் பொதுமக்களிடம் இதுக்குறித்த பிரச்சாரத்தை எடுத்துச் செல்லும்.' இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் மாணவிகள், அவர்களது பெற்றோர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விலைவாசி உயர்வைக் கண்டித்து தேசிய பெண்கள் முன்னணி பேரணி"

கருத்துரையிடுக