பெங்களூர்,ஜன.22:கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தார். இதனால் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடி பா.ஜ.க கடும் அதிர்ச்சியடைந்தது
ஷிமோகாவை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிரஜின்பாஷா மற்றும் கே.என்.பால்ராஜ் ஆகியோர் கடந்த 2010 டிசம்பர் 28-ம் தேதி ஆளுநர் பரத்வாஜை சந்தித்து, முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி அளிக்குமாறு மனு அளித்திருந்தனர்.
இதற்கு ஆதாரமாக ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் புகார் மனுவுடன் இணைத்திருந்தனர்.
முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவது பற்றி ஆளுநர் பரிசீலித்து வந்த நிலையில், இந்த நடவடிக்கையை கைவிடுமாறு கோரி கடந்த 19-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு கடிதம் மூலம் எடியூரப்பா தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் மற்றும் எடியூரப்பாவுக்கிடையே கடுமையான பனிப்போர் நடந்துவருகிறது.
இந்நிலையில் ஆளுநரை திரும்பப் பெறுமாறு பா.ஜ.க கோரியது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஊழல் தடுப்பு சட்டம், 1988 பிரிவு 19(1) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 பிரிவு 197ன் கீழ் முதல்வர், உள்துறை அமைச்சர் மீதான ஊழல் புகார் தொடர்பாக உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இரு வழக்கறிஞர்களுக்கும் அனுமதி அளித்து ஆளுநர் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக,முதல்வர் மீது வழக்குத் தொடர அனுமதிப்பது தொடர்பான நடவடிக்கையை கைவிடுமாறு கோரும் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்திருந்தார்.

0 கருத்துகள்: on "எடியூரப்பா மீது வழக்குத்தொடர ஆளுநர் அனுமதி"
கருத்துரையிடுக