22 ஜன., 2011

அமெரிக்க முஸ்லிம் இளைஞருக்கு குவைத்தில் சித்திரவதை

வாஷிங்டன்,ஜன.22:அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் அலெக்சாண்ட்ரியாவைச் சார்ந்தவர் குலத் முஹம்மது என்ற 19 வயது இளைஞர். இவர் சோமாலியாவில் பிறந்தவர். தற்போழுது அமெரிக்க குடிமகனாக இருக்கிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் குவைத் நாட்டிற்கு செல்லும்பொழுது விமானநிலையத்தில் வைத்து கைதுச் செய்யப்படுகிறார். இதனைத் தொடர்ந்து இவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

விசாரணையின் போது யெமனுக்கும், சோமாலியாவுக்கும் நீ ஏன்? பயணம் மேற்கொண்டாய்? என அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அவ்வேளைகளில் விசாரணை அதிகாரிகள் குலத் முஹம்மதை காலில் கடுமையாக அடித்தும் உடலின் இதர பகுதிகளில் கம்பால் அடித்தும் சித்திரவதைச் செய்துள்ளனர். பிறப்புறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சுவிடுவோம் எனக்கூறி மிரட்டியுள்ளனர்.

ஒரு மாத சிறைவாசத்திற்கு பிறகு குலத் முஹம்மது அமெரிக்கா திரும்பியுள்ளார். இதுக் குறித்து இவரது வழக்கறிஞர் தெரிவிக்கையில், அமெரிக்காவின் உத்தரவின்படியே குலத் முஹம்மது கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார் என தெரிவிக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இவரது வழக்கறிஞர்கள் அமெரிக்க நீதித்துறை, எஃப்.பி.ஐ மற்றும் தீவிரவாத கண்காணிப்பு மையம் ஆகியவற்றின் மீது வழக்கினை பதிவுச் செய்துள்ளனர்.

எஃப்.பி.ஐயின் செய்தியாளர் இதுக்குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
செய்தி:AFP

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க முஸ்லிம் இளைஞருக்கு குவைத்தில் சித்திரவதை"

கருத்துரையிடுக