16 ஜன., 2011

ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தை விற்ற சம்பவம்: சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரை

மும்பை,ஜன.16:மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ராணுவம் குத்தகைக்கு எடுத்த ஒரு ஏக்கர் நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக விற்றதுத் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த லெஃப்டினண்ட் கர்னல் பிரதீப் கன்னா பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பரிந்துரைச் செய்துள்ளார்.

இந்நிலம் வணிக வளாகம் கட்டுவதற்காக நியோ-ஃபார்மா தனியார் நிறுவனத்திற்கு அரசு விற்றது. ராணுவத்தின் அனுமதியில்லாமல் இந்நிலம் விற்பதற்கு எவ்வித காரணமுமில்லை என கன்னா தெரிவித்தார்.

1942 ஆம் ஆண்டு இந்நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு இந்நிலம் ராணுவத்தின் அனுமதியில்லாமல் ஆறுகோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது என கன்னா தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தை விற்ற சம்பவம்: சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரை"

Mohideen சொன்னது…

Nazeerஇன்னும் இந்தியாவில் என்ன கொடுமை ல நடக்க போஹுதோ

கருத்துரையிடுக