பஞ்ச்குலா,ஜன.16:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தாவின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவுச் செய்தது.
பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சி.ஜெ.எம் நீதிபதி ராகேஷ் சிங் முன்பு அஸிமானந்தாவின் வாக்குமூலம் ரகசியமாக பதிவுச் செய்யப்பட்டது.
அஸிமானாந்தாவின் வாக்குமூலத்தை பதிவுச் செய்ய வேண்டுமெனக்கோரி என்.ஐ.ஏ கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தை அணுகியிருந்தது.
ஹரியானாவில் பானிபட் மாவட்டத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ரெயில் குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புத் தொடர்பாக என்.ஐ.ஏ தேடிவரும் ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோரைக் குறித்து தகவல் தெரிவித்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என அறிவித்தைத் தொடர்ந்து என்.ஐ.ஏ புலனாய்வுக் குழுவினர் மத்திய பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இந்தூரைச் சார்ந்த மேற்கண்ட இருவரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்புடையவர்களாவர். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய வெடிப்பொருட்களில் சில இந்தூரிலிருந்து கொண்டுவந்ததாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அஸிமானந்தாவின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டது"
கருத்துரையிடுக