26 ஜன., 2011

காஸ்ஸா நிவாரணக் கப்பல் தாக்குதல்: இஸ்ரேலின் கண் துடைப்பு கமிஷனுக்கு அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்,ஜன.26:காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் அவதியுறும் ஃபலஸ்தீன் மக்களுக்கு மருந்துகள் உள்பட நிவாரணப் பொருட்களுடன் சென்ற ப்ளோட்டில்லா கப்பல் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலின் கொடூர நடவடிக்கையை நியாயப்படுத்திய இஸ்ரேலிய கண் துடைப்பு விசாரணை கமிஷனுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் கமாண்டோக்களின் நடவடிக்கை நியாயமானதுதான் என அமெரிக்க அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவ்லி தெரிவித்துள்ளார்.

பாரபட்சமற்ற விசாரணையை இஸ்ரேல் நடத்தியதாம்-க்ரவ்லி கூறுகிறார். முன்பு இதனைக் குறித்து விசாரணைச்செய்த ஐ.நாவின் விசாரணைக்குழு இஸ்ரேலிய படையினர் குற்றவாளிகள் என அறிவித்திருந்தது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஸ்ஸா நிவாரணக் கப்பல் தாக்குதல்: இஸ்ரேலின் கண் துடைப்பு கமிஷனுக்கு அமெரிக்கா ஆதரவு"

கருத்துரையிடுக