26 ஜன., 2011

கர்நாடகாவில் பந்த் நடத்திய பாஜக அங்கீகாரத்தை ரத்து செய்ய காங்கிரஸ் கோரிக்கை

பெங்களூர்,ஜன.26:விதிமுறைகளை மீறி பந்த் நடத்திய பாஜகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு கர்நாடக மாநில கங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது.

கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜ் அனுமதி அளித்தார். இதையடுத்து பாஜக கடந்த 22-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தியது. இதனால் மாநிலத்தில் ஆங்காங்கே போராட்டங்களும், பஸ் எரிப்புகளும் நடந்தன.

கர்நாடக காங்கிரஸின் சட்டம் மற்றும் மனித உரிமை பிரிவு சேர்மன் சி.எம்.தனஞ்ஜெயா கூறுகையில், "பாஜக பந்த் நடத்தியதின் மூலம் சட்டத்தை மீறியுள்ளது. இதனால் அக்கட்சியின் மாநில அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

"இந்த பந்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும், அரசு உடமைகளும் சேதப்படுத்தப்பட்டது", என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்நாடகாவில் பந்த் நடத்திய பாஜக அங்கீகாரத்தை ரத்து செய்ய காங்கிரஸ் கோரிக்கை"

கருத்துரையிடுக