ஜம்மு,ஜன.11:கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுக் காண்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நடுவர்குழு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
கஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், போராடவும் அவர்களுக்கு உரிமையுண்டு என்பதை அழுத்தம் திருத்தமாக கூறும் இவ்வறிக்கை கஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதற்கு தேவையான அடிப்படை திட்டம் குறித்து வாதிப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கஷ்மீர் மக்களுக்கு அவர்கள் விரும்பும் சலுகைகளும், மரியாதையும் அளிப்பதுதான் சரியான வழிக்கான ஆரம்ப சுவடு என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் திலிப் பட்காங்கர் தலைமையிலான மத்திய நடுவர்குழு கஷ்மீரின் பலதரப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர் மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையுண்டு: மத்திய நடுவர்குழு"
கருத்துரையிடுக