லக்னோ,ஜன.11:பாப்ரி மஸ்ஜித் இடிப்புத் தொடர்பாக ராய்பரேலி நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த உதவ வேண்டுமென முஸ்லிம் தனியார் சட்டவாரியம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ராய்பரேலி நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு கடிதம் எழுதவிருப்பதாக சட்டவாரிய உறுப்பினர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார்.
முஸ்லிம் தனியார் சட்டவாரிய பாப்ரி மஸ்ஜித் கமிட்டி கோ கன்வீனர் காஸிம் இல்யாஸி வழக்கில் கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சரிடம் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார் என ஜீலானி தெரிவித்தார்.
நேற்று முன் தினம் டெல்லியில் நடந்த பாப்ரி மஸ்ஜித் கமிட்டியில் இது தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுபரிசீலனை மனு தள்ளுபடிச் செய்யப்பட்ட சூழலில் சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்யவேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்குகள் மீது தினந்தோறும் வாதம் கேட்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்ததாக ஜீலானி தெரிவித்தார்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால், இவ்விவகாரத்தை மீண்டும் வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: விசாரணையை துரிதப்படுத்த முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கோரிக்கை"
கருத்துரையிடுக