17 ஜன., 2011

பாமரனின் சிந்தனைக்கு...

ஜனநாயக சந்தையில் ஊழலுக்கு விலை யில்லை
அது ஆக்கிரமிக்காமல் விட்ட இடமுமில்லை
ஜனனம் முதல் மரணம் வரை....
ஆதி முதல் அங்கம் வரை.....
சாதி முதல் சங்கம் வரை....
நதிகளை இணைப்பதில் இணைகிறார்களோ இல்லையோ?
ஊழலில் மட்டும் இணைகிறார்கள்...

இந்தியா வல்லரசு(?)தான்... ஊழலில்.
ஊழல் இன்னும் பாடதிட்டமாக்கப்பட வில்லை....
யாருக்கு தெரியும்... அடுத்த அரசாங்கத்தின்
செயல் திட்டமாகக்கூட இருக்கலாம்...

இந்தியா ஒளிர்கிறது...
ஊழல் எண்ணெய் விடப்பட்டுள்ளதால்..
ரொம்ப பிரகாசமாகவே எரிகிறது..
பாமரனின் பட்டினி வயிறும்.

பிறந்த, பிறக்காத ஒவ்வொரு உயிரின் மீதும் கடன்..
உலக சரித்திரத்தில் இந்தியாவின் புதிய சாதனை இது.

2010 இறுதியில் ஜன நா(யா)யக ஓ(ஆ)ட்டத்தில்,
ராசா ஆட்ட நாயகன்,
ராடியா ஆட்ட தொடர் நாயகி,

ஊழலின் பத்திரிக்கை வர்ணனைகள்...
பாமரனுக்கு புரிவதே யில்லை.....?
2 ஜி என்றால் என்ன? பாமரனிடம் கேட்டால்...
பாமரனின் பதில் பரிதாபமாக
ஒன்னு சோனியா ஜி!
ரெண்டு மன்மோகன் ஜி! என்கிறான்...

சலுகைகள் நம்மை மூளைச் சரக்கில்லாதவர்களாக சமைத்துவிட்டது.
சாகும் கயிராய் நம் கழுத்தை இறுக்குகிறது - சலுகைகள்.
ரேசன் அட்டைகளில் சலுகைகளின் பதிவுகளால்..
பக்கங்கள் திணறுகின்றன...

ஜனநாயக சந்தையில் சாமான் வாங்குவது
சாமர்த்தியம் தான் போலும்!

ஜனநாயக சந்தையில் ...
சாதிக்கும் விலை...
நீதிக்கும் விலை...

இவை எதையுமே அறியாமல்...

வண்ணத் தொலைக்காட்சி வாங்குவதற்கு வறிந்து கட்டிக்கொண்டும்...
வாக்குச்சாவடிக்கு வக்கனையாய் வாக்காளர் என்ற பெயரிலும்..
இலவச மயாணங்களுக்கு மத்தியில் மந்தைகளாய்....
பாமரன் .......................?
 
மாற்றுச் சிந்தனைகளோடு
நான்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 கருத்துகள்: on "பாமரனின் சிந்தனைக்கு..."

Heamat karkare சொன்னது…

Arumayana senthanai ......

Valthukal nanbarae !!!!

pamaran சொன்னது…

Konjam Ediuurappa vaium sathuerunthal ennum nanraha erunthirukum ....

Riaz Ahamed சொன்னது…

தற்போதைய தேவை - தலைகீழ் மாற்றம், பாமரனின் சிந்தனையிலும் செயலிலும்.

மாஷ் சொன்னது…

அருமையான கவிதை.

வாழ்த்துக்கள்!

கருத்துரையிடுக