17 ஜன., 2011

துனீசியாவில் ஜனநாயகம் மலருமா?

வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள குட்டி நாடு துனீசியா. இந்த நாடு அரபு நாடுகளில் அதிக கல்வியறிவைக் கொண்டதாகும். சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டின் சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலி மக்கள் திரள் போராட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் நாட்டைவிட்டு வெளியேறி சவூதிஅரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு நோயினால் அவதியுற்ற பிறகும் பதவி விலகாத அன்றைய அதிபர் போர்கிபோவை ராணுவ புரட்சி மூலம் அகற்றிவிட்டு ஆட்சியை பிடித்தார் உளவுத்துறை தலைவராகயிருந்த பின் அலி.

போர்கிபோவையும், பின் அலியையும் ஆதரித்தது பிரான்சு. இன்னொரு வகையில் துனீசியா பிரான்சிற்கு இசைவான நாடாகும்.

மக்கள் திரள் போராட்டங்களை மத அடிப்படை வாத முத்திரைக் குத்தியதன் காரணமாக பின் அலி பிரபலமானார். அதனாலேயே அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உற்றத் தோழரானார் பின் அலி.

பின் அலிக்கு முன்பு பதவி வகித்த போர்கிபோ ஷரீஅத் சட்டத்திற்கு எதிரான விஷமக் கருத்துக்களைக் கூறியதால் மேற்கத்தியவாதிளால் சீர்திருத்தவாதி என புகழப்பட்டார்.

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க தேவையில்லை எனக் கூறிய போர்கிபோ ரமலான் மாத பகல்வேளை ஒன்றில் தான் உணவு அருந்துவதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பச் செய்தார். போர்கிபோவின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ராஷித் அல் கன்னோசியின் இஸ்லாமியக் கட்சியான ஹிஸ்ப் அல் நஹ்தா துவக்கிய மக்கள் திரள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுவடைவதை தடுப்பதற்காக பின் அலி ராணுவ புரட்சி மூலம் புருகீபாவை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடித்தார்.

பின்னர் போர்கிபோவை விட கொடூரமான ஆட்சியாளராக மாறினார் பின் அலி. நவீனகால பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய சித்தாந்ததின்படி விளக்கமளிக்கும் ராஷித் அல் கன்னோஷி போன்ற அறிவு ஜீவிகள் துனீசியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

அரபு உலகின் பல்வேறு சர்வாதிகாரிகளைப் போல் பின் அலிக்கும் தனது சொந்த நாடான துனீசியாவுக்கு திரும்பமுடியாது என்பதால் தனது இறுதிகாலம் வரை பிரான்சிலோ அல்லது சவூதி அரேபியாவிலோ ஓய்வெடுக்க நேரிடும் என பலரும் கருதுகின்றனர்.

பின் அலியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் புரட்சிக்கு காரணம் விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற முறைகேடுளும், அரசு ஆதரவுடன் நடைப்பெற்றுவந்த மது விற்பனை, விபச்சாரம் போன்ற சமூக சீர்கேடுகளுமாகும்.

துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சி சில முஸ்லிம் நாடுகளை ஆட்டங்காண வைத்துள்ளதாகவும், இப்புரட்சி ஏனைய முஸ்லிம் நாடுகளிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இச்சூழலில் துனீசியாவில் ஏற்பட்ட புரட்சிக் குறித்து டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி கூறியதைப்போல், உதவி என்ற போர்வையில் பிரான்சு போன்ற மேற்கத்திய நாடுகள் துனீசியாவின் உள்விவகாரத்தில் தலையிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் கடமையாகும்.

இஸ்லாத்தின் அடிப்படையிலான ஜனநாயக ஆட்சி மலர்வதை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் விரும்பாது. அதற்காக பல சதிவேலைகளிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். இன்னும் ஒரு வாரத்தில் இஸ்லாமியக் கட்சியான ஹிஸ்ப் அல் நஹ்தாவின் தலைவரான ராஷித் அல் கன்னோசி துனீசியாவுக்கு திரும்புவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், மக்களை துயரத்தில் ஆழ்த்தும் ஒரு சர்வாதிகாரியை மீண்டும் அரியணை ஏற துனீசிய மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றே நாம் கருதுவோம்!

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "துனீசியாவில் ஜனநாயகம் மலருமா?"

Mohamed Ameen சொன்னது…

DISUNITY AMONG THE MUSLIMS ( Context of Tunisia)

Disunity among the Ummah is very dangerous and it may provide a murderous opportunity for the adversaries to add fuel to the fire.


After all, Ahmedinejad had not been a corrupt, incompetent or an immoral ruler. He has scored more than pass mark (I will give him a Merit Pass) There is no hard evidence to prove that last year’s election was a farce.


Try to go back to the earliest time of Islamic history when Khalifa Uthman ibn Affan (ra) was assassinated and when Ali ibn Abi Talib (ra) assumed the leadership of the nation of Islam.

The cunning Muawiyah and his group wanted the culprits, who planned and executed the assassination to be caught and punished as soon as possible, but Ali (ra) wanted to concentrate on the peace, unity and administration of the Ummah, but his adversaries were stubborn and had a political axe to grind. This led to the weakening and disintegration of the Nation of Islam. Did Islam gain by this sort of rationalistic freedom?

This is exactly what may happen in Iran if the followers of Mousavi pursued their selfishness and greed for political power. They may play into the hands of the enemies of Iran who have been waiting for a pretext and an opportunity to destabilize the nation and in the process help the ambitions of the greatest enemies of Islam

For the sake of saving the millions of innocent people of a Muslim nation, at times we have to forgive and forget the shortcomings of our leaders and rulers rather than trying to change the regime, create massive anarchy ( look at Afghanistan) by getting help from insincere and manipulating Non-Muslim world powers.

Iraq is right in front of our eyes. Tens of thousands of People like me hated Saddam Hussein and went to the extent of morally co-operating with his opponents and dissidents in seeking help to punish and execute Saddam and overthrow his administration (Remember Dr. Ahmed Chalabi and gang). What were the consequences?

But right now the same people feel the foolishness, naivety and immaturity of such political thinking and wish if only Saddam had remained in power and we could have saved the deaths of about 1.2 million Iraqis and about 400,000 people becoming refugees, over 600,000 widows and about 500,000 orphans and the nation going to the dogs. Who was responsible for this tragedy?

Case Two: Afghanistan: Islam was trying hard to destroy group loyalty and tribalism, but the people of Afghan gave importance to their tribes: Pushtu, Hazar, Tajik, Uzbeks, Turkmen, Kyrgyzs etc, and their leaders like Burhanuddin, Ahmed Mashod, Hikmatyar and others could have reconciled for the sake of the unity of the nation and Ummah but ego and greed for political power corrupted them and brought horrendous bloodshed, devastation and sufferings to the millions of innocent people and brought a shame to Islam in the world.

In conclusion I will say that we have to be patient, pray hard and should not try to create anarchy and confusion in Muslim societies for the sake of political power. There are hard lessons for the Indian Muslims from these tragedies. United we stand and divided we fall.

Let us wait until Allah swt Bring about a change in leadership

கருத்துரையிடுக