17 ஜன., 2011

இந்திய ராணுவத்தில் முஸ்லிம்கள் 3 சதவீதம் உயிர் தியாகத்தில் 6 சதவீதம்

புதுடெல்லி,ஜன.17:இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதமாவர். ஆனால், இந்தியாவின் ராணுவத்தில் அவர்களின் எண்ணிக்கையோ வெறும் 3 சதவீதம்தான்.

கடந்த 2010 ஆம் ஆண்டு 187 ஜவான்கள் தங்கள் உயிரை தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். அதில் 6.41 சதவீதம்பேர் முஸ்லிம்களாவர். அவ்வாறெனில் தங்களது சதவீதத்திற்கு அதிகமாகவே உயிர் தியாகம் புரிந்துள்ளனர் முஸ்லிம் ராணுவத்தினர். 12 முஸ்லிம்கள் தங்களது இன்னுயிரை தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். அதில் 10 பேர்கள் தரைப் படையில் பணியாற்றியவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகள் கழிந்த பொழுதும் ராணுவத்தில் தேர்வுச் செய்யப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வரலாற்றாய்வாளர் டாக்டர் உமர் காலிதி அவர்கள் மிகுந்த ஆய்வுச் செய்து, ஆவணங்களின் ஆதாரத்துடன் வெளியிட்ட Khaki and Ethnic Violence(காக்கியும், இன வன்முறையும்) என்ற நூலில் இதுக்குறித்து தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

ராணுவத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை எடுத்துரைத்தது இந்நூல். இது பாராளுமன்றத்தில் சூடான விவாதத்திற்கும் காரணமானது.

5 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்களின் பிற்போக்குத் தன்மையைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சச்சார் கமிஷன் அறிக்கை ராணுவத்திடம் முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு என கேள்வி எழுப்பிய பொழுது, மத ரீதியாக எந்த எண்ணிக்கையும் தரமாட்டோம் என ராணுவம் பதிலளித்தது.

ராணுவத்தில் ஒவ்வொரு மதத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதற்கு எவ்வித அதிகாரப்பூர்வமான அறிக்கையும் இல்லை. 3 சதவீதம் என்பது பொதுவான ஊகமாகும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களில் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை 29 ஆயிரம் இருக்கலாம். ஆனால், இந்த எண்ணிக்கை ஜம்மு கஷ்மீர் காலட்படையில் இடம்பெற்றிருக்கும் 50 சதவீத முஸ்லிம்களை குறைத்தால் இன்னும் மிகக் குறைந்த சதவீதமாகும். இருந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு ராணுவத்தில் அதிக அளவில் சிறுபான்மை மக்களை சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு(2010) நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த முஸ்லிம்களின் விபரம்:

source:twocircles.net
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 கருத்துகள்: on "இந்திய ராணுவத்தில் முஸ்லிம்கள் 3 சதவீதம் உயிர் தியாகத்தில் 6 சதவீதம்"

jar சொன்னது…

முஸ்லிம்கள் என்றுமே தியாகங்களின் முன்னோடி என்பதை நிரூபித்து வருகிறார்கள்.

Heamet karkare சொன்னது…

oru ranuvaveran erranthal ellla pathireekaiellum varum avan entha uraha errunthalum ...annal muslim ranuvaveeran erranthal antha manilapathireekaiyae purakaneekuthu !!

We are alwaz sacrifice mind for our nation ....

Indian சொன்னது…

iam a regular news(indian) paper reader still date i was not yet to see this kind of news related to muslim sacrifice in indian miltary .....wat a shame for daily pappers !! oh my god !!

B4 freedom they oly sacrifice thier lifes for india For example INA (Subose Santhara Bose)he knows abt our brave thats way he was appointed Frist MAjor General as a Muslim (i think shanavaz khan)

Now oly iam came to know there is musim in miltary ...
Go Head Muslim's We all are with you along with your god ...
strive for ur Islam as well as India pls this humble request for one secular indian ...because i know abt ur brave and sacrifice in indian freeedom struggle .....

Fasists bealert !!
Mulims are allready wakeuped !!

கருத்துரையிடுக