30 ஜன., 2011

நோபல் பரிசுக்கு பரிசீலிக்கப்பட்ட பெல்ஜிய நாட்டு புரோகிதர் பாலியல் கொடுமையை செய்ததாக ஒப்புதல்

ப்ரஸ்ஸல்ஸ்,ஜன.30:சமூக களத்தில் தீவிரமாக பணியாற்றிய பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர் ஃப்ரான்காய்ஸ் ஹவ்டார்ட் பாலியல் கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

வளர்ந்துவரும் நாடுகளில் உலகமயமாக்கலின் விளைவுகளுக்கெதிராக போராட்டம் நடத்தியதால் ஹவ்டார்ட்டை நோபல் பரிசுக்கு பரிசீலிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் நடந்துவரும் வேளையில்தான் இக்குற்றச்சாட்டு எழுந்தது.

புரோகிதர் ஹவ்டார்ட்டின் குற்ற ஒப்புதலை பெல்ஜிய நாட்டு பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. பெல்ஜியத்தில் பாலியல் வன்கொடுமைகளில் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் ஈடுபட்ட செய்தி அந்நாட்டை உலுக்கிய வேளையில் இச்சம்பவம் வெளியானது கத்தோலிக்க சபையை மேலும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் நிர்பந்தத்தால் கத்தோலிக்க சபை 100க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்த தகவல்களை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தது. இரண்டு வயது சிறுவன் வரை பாதிரிகளின் காமவெறிக்கு பலியாகியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் ஹவ்டார்ட்டை நோபல் பரிசுக்கு பரிசீலிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் துவங்கியது. அவ்வேளையில்தான் ஹவ்டார்ட் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரனை பாலியல் வன்கொடுமைச் செய்த நிகழ்வை ஒரு பெண்மணி வெளிக்கொணர்ந்தார். இதனைத் தொடர்ந்து நோபல் பரிசுக்கு ஹவ்டார்ட்டை முன்மொழியும் முயற்சியிலிருந்து அவரது ஆதரவாளர்கள் வாபஸ்பெற்றனர்.

உலகமயமாக்கலுக்கெதிராக போராடும் செட்ரா என்ற அமைப்பிலிருந்து ஹவ்டார்ட் ராஜினாமாச் செய்திருந்தார். தற்போது ஹவ்டார்ட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நோபல் பரிசுக்கு பரிசீலிக்கப்பட்ட பெல்ஜிய நாட்டு புரோகிதர் பாலியல் கொடுமையை செய்ததாக ஒப்புதல்"

கருத்துரையிடுக