30 ஜன., 2011

போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்துமாறு முபாரக்கிடம் ஒபாமா கோரிக்கை

வாஷிங்டன்,ஜன.30:எகிப்து அரசுக்கெதிராக போராட்டம் நடத்திவரும் மக்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அந்நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிடம் வலியுறுத்தியுள்ளார்.

எகிப்து நாட்டு மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுவோம் எனவும் தேசத்தின் சிறந்ததொரு எதிர்காலத்திற்காக அரசுடன் இணந்து செயல்படுவோம் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோர் மீதான நடவடிக்கையை கைவிடுமாறு ஒபாமா முபாரக்குடன் நடத்திய அரை மணிநேர தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.

உலகில் இதர நாட்டு மக்களைப்போல் அமைதியாக ஒன்றுகூடவும், சுதந்திரமாக கருத்துக்களை கூறவும் தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கவும் எகிப்து நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. எங்கேயும் இத்தகைய உரிமைகளுக்காக அமெரிக்கா பாடுபடும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.

போராட்டத்தைத் தொடர்ந்து தடைச் செய்யப்பட்ட இணையதளம், தொலைபேசி தொடர்புகளை மீண்டும் செயல்படவைக்குமாறு ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

மேற்காசியா விவகாரங்களில் என்றைக்குமே அமெரிக்காவுடன் ஒத்துழைத்த முபாரக்கை நெருக்கடியான காலக்கட்டங்களில் அமெரிக்கா கைகழுவுகிறது என்பதைத்தான் ஒபாமாவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்துமாறு முபாரக்கிடம் ஒபாமா கோரிக்கை"

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

//போராட்டத்தைத் தொடர்ந்து தடைச் செய்யப்பட்ட இணையதளம், தொலைபேசி தொடர்புகளை மீண்டும் செயல்படவைக்குமாறு ஒபாமா வலியுறுத்தியுள்ளார்... எங்கேயும் இத்தகைய உரிமைகளுக்காக அமெரிக்கா பாடுபடும் என ஒபாமா தெரிவித்துள்ளார்//--?!?!?!?!?!?!?!?!? விக்கிலீக்ஸ் அதிர்ச்சி..!

Mohamed Ameen சொன்னது…

As the Shah of Iran brutally killed, Husni Mubarak is attacking his own people with American bullets and tear gas cannons.

"Made in USA" marked on burnt cannons on the streets of Cairo for its people to understand the conspiracy of democracy and controlling violence.

It is not surprising why there is so much anti-American sentiment across the world and more so in the Muslim world. This is another case study of U.S. foreign policy of aiding arms and financing a dictator for decades and ending up on the wrong side of history.

At least now the U.S. government and the people should stop hoping for Mubarak to hang-on. Many may wonder which military strongman that the CIA is going to recommend to replace Mubaruk.

Husni Mubaruk has chosen a man he can trust while the people are trying to chase him away. But Mr. Suleiman, a former general, is also the Mubaruk’s candidate, not the one that the people of Egypt will approve.

His appointment if it were to occur would not represent the democratic change called for on the street, but most likely a continuation of the kind of military-backed, oppressive, corrupt, authoritarian and pro-Israeli, pro-American leadership that Mr. Mubaruk has led for nearly 30 years.


Basically this is a way of paving the way for a military-led regime under the guise of reforms and democracy, a good move to please the U.S. neo-cons.

After all, Suleiman is said to hold a similar worldview, deeply distrusting Iran, favouring close relations with Washington, supporting the cold peace with Israel, and against easing up on the Muslim Brotherhood, the principal opposition group in Egypt.

கருத்துரையிடுக