30 ஜன., 2011

போராட்டங்களில் கலந்துக்கொள்ளும் வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர் - குவைத் எச்சரிக்கை

குவைத்,ஜன.30:குவைத் நாட்டில் கண்டனப் போராட்டங்களில் கலந்துக் கொள்ளும் வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல்வதன் பத்திரிகை இச்செய்தியினை வெளியிட்டுள்ளது.

குவைத்தில் வாழ்ந்துவரும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், அரபு, ஆசியா நாடுகள் உள்பட அனைத்து வெளிநாட்டினரும் குவைத் நாட்டின் சட்டங்களை மதித்து நடக்கவேண்டும். குடும்பத்துடன் நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்கு கண்டனப் பேரணிகளில் கலந்துக்கொள்ளக் கூடாது என அப்பத்திரிகை தெரிவிக்கிறது.

போராட்டங்களில் பங்கேற்போர் அவரவர் நாடுகளுக்கு சென்று போராட்டங்களில் கலந்துக் கொள்ளட்டும் என்பதுதான் குவைத் அரசின் நிலைப்பாடாகும்.

எகிப்தில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குவைத்தில் வாழும் எகிப்து நாட்டவர்கள் எகிப்து தூதரகத்திற்கு முன்பாக பேரணி நடத்த தயாரான வேளையில் குவைத் நாட்டு அதிகாரிகள் அவர்களை கைதுச் செய்திருந்தனர். இதன் பின்னர் குவைத் அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது.

கூட்டம் நடத்தியதாக குற்றஞ்சாட்டி கடந்த ஏப்ரல் மாதம் அல்பராதியின் ஆதரவாளர்களான பல எகிப்து நாட்டைச் சார்ந்தவர்களையும் குவைத் நாடு கடத்தியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போராட்டங்களில் கலந்துக்கொள்ளும் வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர் - குவைத் எச்சரிக்கை"

கருத்துரையிடுக