30 ஜன., 2011

அமெரிக்க ராணுவத்தில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர்

வாஷிங்டன்,ஜன.30:அமெரிக்க ராணுவத்தில் மூன்றிலொரு பகுதி பெண்களும் சக ராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகுவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. நேசனல் பப்ளிக் ரேடியோ இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு இத்தகைய குற்றங்களை புரிந்த ராணுவ வீரர்களுக்கு பதவி இறக்கம், இடைநீக்கம், உபதேசம் ஆகியன மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டது என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

அமெரிக்க ராணுவத்தில் எல்லோருக்கும் ஒரு போர் கூட்டாளி(battle buddy) வேண்டும் என்பது வழக்கமாகும். பெண்கள் குளியலறைக்கோ, கழிவறைக்கோ செல்லும்வேளையில் உடன் எவரும் இல்லையெனில் சக ராணுவ வீரர்களால் வன்புணர்வுக்கு ஆளாகுவர் என்ற சூழல் அமெரிக்க ராணுவத்தில் நிலவுகிறது என ஆர்மி ஸ்பெஷலிஸ்ட் காண்டில் பெர்ரி கூறுகிறார். எனது யூனிட்டில் நான் மட்டுமே பெண். எனக்கு துணையாக இருப்பது கத்தி அல்லது துப்பாக்கியாகும் என அவர் தெரிவிக்கிறார்.

ஓய்வுபெற்ற அமெரிக்க பெண் ராணுவ வீராங்கனைகளிடம் நடத்திய ஆய்வில் 30 சதவீத பெண்களும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக கண்டறியப்பட்டது. அடுத்த ஆண்டு போர்க்களங்களில் பணியாற்றி மனோரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களிடம் நடத்திய மற்றொரு ஆய்வில் தாங்கள் பாலியல் கொடுமைக்கோ அல்லது பாலியல் வன்புணர்வுக்கோ ஆளானதாக 70 சதவீத அமெரிக்க பெண் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய ஜெமி லெ ஜோன்ஸ் என்ற பெண் புகார் அளித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க ராணுவத்தில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர்"

கருத்துரையிடுக