30 ஜன., 2011

எகிப்து:உள்துறை அமைச்சக தலைமையகத்தை சுற்றிவளைத்தனர் போராட்டக்காரர்கள்

கெய்ரோ,ஜன.30:கடுமையான ஊரடங்கு உத்தரவையும் மீறி கெய்ரோவிலுள்ள போலீஸ் தலைமையகத்தை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

எகிப்திற்கு செல்லவேண்டாம் என இந்தியர்களுக்கு இந்திய வெளியுறுவத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

மாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களான கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா, சூயஸ் ஆகிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியுள்ளனர். இங்கு ஹெலிகாப்டர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. அதேவேளையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிகமான கொள்ளையும் நடந்துவருகிறது.

பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள மஹாதி பிரதேசத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்பதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இஸ்ரேலின் தூதர் எகிப்தை விட்டு வெளியேறிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:உள்துறை அமைச்சக தலைமையகத்தை சுற்றிவளைத்தனர் போராட்டக்காரர்கள்"

கருத்துரையிடுக