30 ஜன., 2011

எகிப்தின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் - நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை

கெய்ரோன்,ஜன.30: 30 வருடங்களாக எகிப்தை ஆட்சிச் செய்யும் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யக்கோரி ஆயிரக்கணக்கான எகிப்திய மக்கள் வீதிகளில் இறங்கி தீவிரமாக போராடத் துவங்கியுள்ளனர்.

போராட்டத்தை அடக்கி ஒடுக்கிவரும் எகிப்திய அரசுப் படையின் தாக்குதலில் நூற்றிற்குமேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. ஏராளமான டாங்குகளையும், அரசு அலுவலகங்களையும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தீக்கிரையாக்கினர். கொல்லப்பட்டவர்களின் உடல்களுடன் அவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை நடத்தினர்.

தற்போதைய சூழல்களைக் குறித்து விவாதிக்க அரசு தலைமையகத்தில் அதிபர் ஹுஸ்னி முபாரக் கூட்டத்தை கூட்டியிருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைக்குமாறு இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே புதிய துணை அதிபராக உமர் சுலைமான நியமிக்கப்பட்டுள்ளார். முதன் முறையாக எகிப்தில் ஒருவர் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசிய புலனாய்வு பிரிவு போலீஸ் தலைவரும், முபாரக்கின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமானவர் உமர் சுலைமான் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதமராக முன்னாள் விமானப்படை அமைச்சர் மூன் அஹ்மத் ஷபீஃக் பொறுப்பேற்றுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்தின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் - நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை"

கருத்துரையிடுக