புதுடெல்லி,ஜன.30:மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளியான சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தும், ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான அபினவ் பாரத்தும், ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரை கொல்ல திட்டமிட்டதாக மிலிட்டரி இண்டலிஜன்ஸின் அறிக்கை கூறுகிறது.
குண்டுவெடிப்புகளை நிகழ்த்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைப்பு அளித்த இந்திரேஷ் குமாருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகம்தான் புரோகித்தையும் அபினவ் பாரத்தையும் கொலைச் செய்வதற்கு திட்டம் தீட்ட தூண்டியது.
ஐ.எஸ்.ஐயிடமிருந்து இந்திரேஷ்குமார் 21 கோடி ரூபாய் இந்திய ப்பணத்தை பெற்றதாக புரோகித்திற்கும், அபினவ் பாரத்திற்கும் சந்தேகம் ஏற்பட்டது.
மலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் இந்திரேஷ்குமாருக்கு பங்கிருப்பதாக இவ்வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வாக்குமூலம் அளித்திருந்தனர். ஆனால், இதனை இந்திரேஷ்குமாரும், ஆர்.எஸ்.எஸும் மறுத்து வந்தனர். அரசியல் விளையாட்டு இதன் பின்னணியில் இருப்பதாக குற்றஞ்சாட்டினர்.
2008 செப்டம்பர் 29-ஆம் தேதி மலேகானில் நடந்த குண்டுவெடிப்பைக் குறித்து விசாரணை நடத்தும் வேளையில்தான் புரோகித், இந்திரேஷ்குமாரை கொல்ல நாங்கள் திட்டம் தீட்டினோ என தெரிவித்திருந்தான்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மிலிட்டரி இண்டலிஜன்ஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தியை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு புரோகித் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவரான சுனில்ஜோஷியை ரகசியம் வெளியே கசியாமலிருப்பதற்கு கொலைச் செய்யப்பட்டதாக குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்திருந்தான்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இந்திரேஷ்குமாரை கொலைச் செய்ய திட்டம் தீட்டியதாக கர்னல் புரோகித்"
கருத்துரையிடுக