29 ஜன., 2011

உலக முஸ்லிம்களின் ஜனத்தொகை 2030-ல் இருமடங்காகும் என ஆய்வு

வாஷிங்டன்,ஜன.29:2030 ஆம் ஆண்டில் உலக அளவில் முஸ்லிம்களின் ஜனத்தொகை பிற மதத்தினரின் வளர்ச்சியை விட இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வு ஒன்று கூறுகிறது.

அமெரிக்காவை மையமாகக் கொண்ட 'த ஃப்யூ ஃபாரம் ஆன் ரிலீஜியன் அன்ட் பப்ளிக் லைஃப்' என்ற அமைப்பும் 'த ஃப்யூச்சர் ஆஃப் த க்ளோபல் முஸ்லிம் பாப்புலேஷன்' என்ற அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

17.72 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் தற்பொழுது வாழ்ந்து வருகின்றனர். இது இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் 14.6 சதவீதமாகும். ஆனால், 2030 ஆம் ஆண்டு இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.61 சதவீதமாக அதிகரிக்கும் என ஆய்வறிக்கை கூறுகிறது. இருபது ஆண்டுகளில் உலகிலேயே அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தோனேஷியாவிடமிருந்து பாகிஸ்தான் பறித்துக்கொள்ளும்.

தற்போதைய பாகிஸ்தான் மக்கள் தொகை 17.8 சதவீதமாகும். 2030 ஆம் ஆண்டு இது 25.61 கோடியாக அதிகரிக்கும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலக முஸ்லிம்களின் ஜனத்தொகை 2030-ல் இருமடங்காகும் என ஆய்வு"

கருத்துரையிடுக