29 ஜன., 2011

ஜோர்டானிலும் போராட்டம் தீவிரம்

அம்மான்,ஜன.29:விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து ஜோர்டானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

மக்கள் விரோதக் கொள்கைகளை கடைப்பிடித்து வரும் பிரதமர் ஸமீர் ரிஃபாயி ராஜினாமாச் செய்யவேண்டும் எனக்கோரி தலைநகரான அம்மானில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.

முக்கிய எதிர்கட்சியான இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான இஸ்லாமிக் ஆக்‌ஷன் ஃப்ரண்ட், தொழிலாளர்கள் அமைப்புகள், இடதுசாரிகள் ஆகியோர் இணைந்து இப்போராட்டட்தை நடத்துகின்றனர்.

'ஊழல் பெருச்சாளிகளை நீதிமன்றத்திற்கு கொண்டுவாருங்கள்' என்ற பேனருடன் இப்போராட்டத்தை நடத்தினார்கள் அவர். துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சி ஜோர்டான் மக்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

நேற்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் அரசைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் ஹம்மாம் ஸைத் தெரிவித்தார்.

மன்னருக்கு அதிகமான அதிகாரம் வழங்குவதை நிறுத்திவிட்டு அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார். தேர்தல் சட்டம் திருத்துவது உள்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜோர்டான் மனனர் அப்துல்லாஹ் வாக்குறுதியளித்துள்ளார்.

நாட்டின் பணவீக்கம் 2.5 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாக இம்மாதம் அதிகரித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும் முறையே 22, 25 சதவீதமாகும்.

நாட்டின் தற்போதைய சூழலில் மாற்றம் இன்றியமையாதது என பல்கலைக்கழக பேராசிரியர் இப்ராஹீம் அலூஷ் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜோர்டானிலும் போராட்டம் தீவிரம்"

கருத்துரையிடுக