29 ஜன., 2011

தப்லீக் ஜமாஅத்தின் இரண்டாவது கட்ட மாநாடு டாக்காவில் துவக்கம்

டாக்கா,ஜன.29:தப்லீக் ஜமாஅத்தின் வருடாந்திர மாநாடான பிஸ்வா இஜ்திமாவின் இரண்டாவது கட்டம் பங்களாதேஷ் தலைநகரம் டாக்காவில் துவங்கியது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். புனித ஹஜ்ஜிற்கு அடுத்தபடியாக அதிகமான முஸ்லிம்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இந்த இஜ்திமா கருதப்படுகிறது.

பங்களாதேஷ் அதிபர், பிரதமர் ஷேக் ஹஸீனா, எதிர்கட்சித் தலைவர் கலிதா ஜியா ஆகியோர் முதல் கட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இஸ்லாத்தின் செய்தியை பரவலாக்க 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாநாடுதான் பிஸ்வா இஜ்திமாஃ. முதல் முறையாக இவ்வாண்டு இம்மாநாடு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. அதிகமான மக்கள் பங்கேற்பதை கவனத்தில் கொண்டு இம்முறை ஜனவரி 22 முதல் 23 வரையும், ஜனவரி 28 முதல் 30 வரையும் இரண்டு கட்டங்களாக நடத்த தீர்மானித்ததாக மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

28 ஆயிரம் போலீசாரும், அதிவிரைவுப் படையினரும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வர் என அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தப்லீக் ஜமாஅத்தின் இரண்டாவது கட்ட மாநாடு டாக்காவில் துவக்கம்"

கருத்துரையிடுக