29 ஜன., 2011

எடியூரப்பா கர்நாடகாவின் பா.ஜ.கவின் முதல் மற்றும் கடைசி முதல்வர்: தேவகவுடா

திருவனந்தபுரம்,ஜன.29:கர்நாடகாவை ஆளும் பா.ஜ.கவின் முதல் மற்றும் கடைசி முதல்வர் எடியூராப்பா என மதசார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய தலைவர் ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இவரைப் போன்றதொரு முதல்வர் உருவாகவில்லை. எடியூரப்பாவின் ஊழலை புரிந்துகொண்டுதான் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் அவரை ஆதரிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் ஊழலை எதிர்க்க பா.ஜ.கவுக்கு யோக்கியதை என்ன இருக்கிறது? என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தேவகெளடா கேள்வி எழுப்பினார்.

எடியூரப்பாவை விசாரிக்க அனுமதியளித்த ஆளுநரின் நடவடிக்கை சரியானதே. முன்னாள் மத்திய சட்ட அமைச்சரான ஆளுநர் எடியூரப்பாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களைக் குறித்து விரிவாக படித்த பின்னரே வழக்குத் தொடர அனுமதியளித்திருப்பார் எனக் கருதுகிறேன்.

ஆளுநரை மாற்றவேண்டும் என எடியூரப்பா கோருவது முதிர்ச்சியற்றத் தன்மையை காட்டுகிறது. எடியூரப்பாவை மாற்றினால் தேசிய ஜனநாயக கூட்டணியை நான் ஆதரிப்பேன் என அவர் கூறுவது அர்த்தமற்றது.

அடுத்த பாராளுமன்றக் கூட்டத்தொடர் அமைதியாக நடக்க எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும். பத்திரிகையாளர் கெ.கெ.ஷாஹினாவுக்கு எதிராக கர்நாடகா போலீஸார் தொடுத்துள்ள வழக்கு ஜனநாயகப் படுகொலையாகும்.

பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏவின் ஆட்சியிலிருந்து ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்தது டெஹல்காவாகும். ஒரு வழக்கில் உண்மையை வெளிக்கொணர நடத்திய முயற்சிக்காக ஷாஹினாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்கெதிராக வலுவான நிலைப்பாட்டை தமது கட்சி எடுத்துள்ளதாக தேவகவுடா தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எடியூரப்பா கர்நாடகாவின் பா.ஜ.கவின் முதல் மற்றும் கடைசி முதல்வர்: தேவகவுடா"

கருத்துரையிடுக