29 ஜன., 2011

எகிப்தில் அரசு கலைப்பு

கெய்ரோ,ஜன.29:மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து எகிப்து நாட்டில் அந்நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் எகிப்து அரசை கலைத்துவிட்டார். புதிய அமைச்சரவை உடனடியாக பதவியேற்குமென்று அறிவித்துள்ளார்.

எகிப்தில் அரசுக்கெதிரான போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதில் தோல்வியுற்ற பாதுகாப்பு அதிகாரிகளை அவர் விமர்சித்துள்ளார்.

82 வயதான ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக் கொண்டுவருவோம் என கூறிக்கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்தில் மக்கள் திரள் போராட்டம் துவங்கியது. போராட்டத்தில் இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து எகிப்தின் அனைத்து நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் உத்வேகமடைந்த எகிப்திய மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்தில் அரசு கலைப்பு"

கருத்துரையிடுக