29 ஜன., 2011

பிரிவினையைக் கோரியது சாவர்க்கர்: திக் விஜய்சிங்கிற்கு யெச்சூரி ஆதரவு

டெல்லி,ஜன.29:பிரிவினைக் கொள்கையை முன்வைத்தது வீரசாவர்க்கர்தான் என்ற திக் விஜய்சிங்கின் கருத்திற்கு சி.பி.எம் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய சீதாராம் யெச்சூரி திக்விஜய் சிங்கின் கருத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிலுள்ள தீவிர சிந்தனையைக் கொண்டவர்கள்தான் பிரிவினைக்கு வழிவகுத்தனர். இந்தியாவில் முதன் முதலில் தாக்குதல் குணங்கொண்ட ஹிந்துத்துவா கொள்கையை கொண்டுவந்தவர்கள் வீரசாவர்க்கரும், பி.எஸ்.மூஞ்சேயுமாவர்.

பிரிவினையின் மூலமாக இந்தியாவை ஹிந்துத்துவா நாடாக மாற்றுவதுதான் அவர்களது லட்சியம். ஆனால், இந்தியா மதசார்பற்ற குடியரசாக மாறியது. ஒரு ஹிந்துவால் தீவிரவாதியாக மாறமுடியாது என்ற கருத்து தவறாகும். ஹிந்துத்துவா பயங்கரவாதம் சமீபக்காலத்தில்தான் உருவானது என்ற கருத்தும் தவறானதாகும்.

தீவிரவாதக் கொள்கைகளுடன்தான் ஆர்.எஸ்.எஸ் உருவானது. ஹிந்துத்துவா பயங்கரவாதம் என்பது பழமையானது. இருநாடுகள் கொள்கையை எழுப்பிய சாவர்க்கர்தான் ராணுவ ஹிந்துத்துவம், என்ற கொள்கையையும், அரசியலை ஹிந்து மயமாக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தையும் கொண்டுவந்தார். ஆதலால், தற்பொழுது ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினியை காண்பதற்கான தனது ஆவல் குறித்து தன்னுடைய டைரியில் பி.எஸ்.மூஞ்சே எழுதி வைத்துள்ளார். முசோலினியை கண்டபிறகு, அவர் எவ்வளவு அழகாக பாசிசத்தை இத்தாலியில் நடைமுறைப்படுத்துகிறார் என புகழாரம் சூட்டியுள்ளார் மூஞ்சே.

இதனைத் தொடர்ந்து 1935 ஆம் ஆண்டு செண்ட்ரல் ஹிந்து மிலிட்டரி எஜுகேசன் சொசைட்டியை துவக்கினார். இந்த சொசைட்டியின் கீழ்தான் போன்ஸாலா ராணுவ பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது என தெரிவித்த யெச்சூரி, குண்டுவெடிப்புகளின் பெயரால் நிரபராதிகள் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதைக் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்றார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "பிரிவினையைக் கோரியது சாவர்க்கர்: திக் விஜய்சிங்கிற்கு யெச்சூரி ஆதரவு"

zafarRahmani சொன்னது…

"We and our nationhood defined" this book s written by veersavarkar. It is out of print or not published by Sangh fundamentalists. Any one pls reprint to know what is savarkkar's thoughts.
We need The mail translation also .

கருத்துரையிடுக