29 ஜன., 2011

இஷ்ரத் கொல்லப்பட்டது போலி என்கவுண்டரில்: சிறப்பு விசாரணைக்குழு அதிகாரி

அஹ்மதாபாத்,ஜன.29:இஷ்ரத் ஜஹான் உள்பட நான்குபேரை குஜராத் போலீஸ் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதற்குத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளதாக அம்மாநில உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் உறுப்பினரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சதீஷ் சர்மா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போலீசுடன் நடந்த மோதலில்தான் இஷ்ரத் உள்பட நான்குபேர் கொல்லப்பட்டதுக் குறித்து தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார் அவர்.

வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக(அமிக்கஸ்க்யூரி) வழக்கறிஞர் யோகேஷ் லகானி நியமிக்கப்பட்டுள்ளார். சதீஷ் வர்மா, இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக சில சந்தேகங்களை நீதிமன்றத்தில் எழுப்பினார்.

இரண்டு விதமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, குஜராத் முதல்வரைக் கொலை செய்ய வந்தவர்களை போலீஸார் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொன்றிருக்கலாம். மற்றொன்று, அந்த 4 பேரையும் போலீஸார் வேண்டுமென்றே கூட சுட்டுக் கொன்று இருக்கலாம். இதில் இரண்டாவது கூறப்பட்டுள்ள விஷயம் நடந்திருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக புதிதாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் சதீஷ் வர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஷ்ரத் கொல்லப்பட்டது போலி என்கவுண்டரில்: சிறப்பு விசாரணைக்குழு அதிகாரி"

கருத்துரையிடுக