லண்டன்,ஜன.5:மரபணு மாற்றம் செய்யப்பட்ட வித்துக்களை தடைச் செய்யும் ஐரோப்பிய நாடுகளை ராணுவ ரீதியிலான வியாபார யுத்தம் நடத்த பாரிஸில் அமெரிக்க தூதரகம் வாஷிங்டனிற்கு ஆலோசனை வழங்கியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.
மான்சான்டோவின் மரபணு மாற்றஞ்செய்யப்பட்ட சோள விதைகளை தடைச்செய்ய முயன்ற பிரான்சின் தீர்மானத்திற்கு எதிராக பாரிஸில் அமெரிக்க தூதர் க்ரேக் ஸ்டாபில்டன் மரபணு மாற்றஞ்செய்யப்பட்ட விதைகளுக்கு ஆதரவு தெரிவிக்காத நாடுகளுக்கு தண்டனை அளிக்க சிபாரிசுச் செய்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு இதுத் தொடர்பான செய்தி அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் வியாபார பாட்னராவார் ஸ்டாபில்டன். பல நாடுகளிலும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் மரபணு மாற்றஞ்செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்துவதற்கு நிர்பந்தம் அளித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பல வளரும் நாடுகளிலும் கத்தோலிக்க பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்த சூழலில் போப்பின் ஆலோசகரை அணுகவும் அமெரிக்கா முயன்றுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையில் உயிரியல் தொழில் நுட்பத்திற்கான சிறப்பு ஆலோசகரும், கென்யாவில் அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப ஆலோசகரும் இவ்விவகாரத்தில் நடத்திய முயற்சிகள் வெற்றிப் பெற்றதாகவும் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:மான்சான்டோ விதைகளை தடைச் செய்யும் நாடுகளை குறிவைத்த அமெரிக்கா"
கருத்துரையிடுக