5 ஜன., 2011

பாகிஸ்தான்:பஞ்சாப் மாகாண கவர்னரை மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றார்

இஸ்லாமாபாத்,ஜன.5:பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண கவர்னரான ஸல்மான் தஸீரை அவருடைய மெய்க்காப்பாளரே சுட்டுக் கொன்றுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் குஸார் சந்தையில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஒரு விருந்தில் கலந்துகொள்ள வந்த கவர்னரை அதிகாரப்பூர்வ மெய்க்காப்பாளர் பிரிவைச் சார்ந்த அதிகாரி சுட்டுக் கொன்றார்.

இரண்டு தடவை துப்பாக்கிக்குண்டு தாக்கிய கவர்னர் சம்பவ இடத்திலேயே மரணித்தார். பாகிஸ்தானில் மத அவமதிப்பு சட்டத்திற்கு எதிராக எழுந்த விமர்சனங்களை கண்டித்து கவர்னை கொலைச் செய்ததாக கொலையாளி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

1980 ஆம் ஆண்டு மத அவமதிப்பிற்கு மரணத்தண்டனை வழங்கும் சட்டத்தை திருத்த அரசு முயற்சித்த பொழுதும், கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து அம்முயற்சியை அரசு கைவிட்டது.

2007 டிசம்பர் மாதம் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ கொல்லப்பட்ட பிறகு முதன்முறையாக ஒரு மூத்த அரசியல் தலைவர் ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரியின் நெருங்கிய உதவியாளரான 56 வயதான தஸீர் பாகிஸ்தான் பீப்பிள்ஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவராவார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தான்:பஞ்சாப் மாகாண கவர்னரை மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றார்"

கருத்துரையிடுக