கெய்ரோ,ஜனவரி.30: எகிப்தில் நடைபெறும் மக்கள் போராட்டக்களுக்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதலின் போது ராணுவ ஆயுதங்களில் அமெரிக்க சின்னங்கள் காணப்பட்டன. இதனை தொடர்ந்து, எகிப்து மக்களின் கோபம் சர்வேதேச நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது.
எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, எகிப்து மக்கள் ஆறாவது நாளாக இன்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை போராட்டக்காரர்களுக்கெதிராக நடந்த தாக்குதலில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குண்டடிபட்டோர்களின் மரண எண்ணிக்கையை மீடியாவிற்கு தெரிவிக்கக் கூடாது என்று முபாரக்கின் அரசு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை அறிவுறுத்தியுள்ளது.
போராட்டங்கள் மீடியாக்களில் வருவதை தடுக்கும் பொருட்டு, அல்ஜசீரா தொலைகாட்சிக்கு தற்போது எகிப்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: on "எகிப்து மக்களுக்கெதிராக பயன்படுத்தப்பட்ட அமெரிக்க ஆயுதங்கள்"
கருத்துரையிடுக