டாவோஸ்,ஜன.31:கடந்த 2007-ம் ஆண்டு நடந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் வழக்கின் விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே அதுகுறித்த தகவல்களை பாகிஸ்தானுடன் பரிமாறிக் கொள்ள முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இது குறித்து டாவோஸில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'ஆதாரங்களைத் தரமாட்டோம் என்று நாங்கள் சொல்லவேயில்லை. இது விசாரணையின் ஆரம்பக்கட்டம். விசாரணை முடிந்த பிறகு நாங்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ஆதாரங்களை பகிர்ந்து கொள்வோம்.
இந்தியாவின் நிலை குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கிடம் தெரிவித்துள்ளேன்.
முன்பு இந்த தாக்குதல் பின் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. தற்போது எங்களிடம் சில ஆதாரங்கள் உள்ளன. 2 பேர் மீது சந்தேகம் உள்ளது.
இந்து அமைப்பான அபினவ் பாரத் உறுப்பினர் சுவாமி அசீமானந்த் தனக்கு சம்ஜவுதா வழக்கு மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்' என்றார்.

0 கருத்துகள்: on "விசாரணை முடிந்த பிறகே சம்ஜவுதா விசாரணை தகவல்கள் பாக்.குக்குத் தரப்படும் - ப.சிதம்பரம்"
கருத்துரையிடுக