31 ஜன., 2011

ஜெர்மனியில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதல்: 10 பேர் பலி

மாக்டெபர்க்,ஜன.31:ஜெர்மனியில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் போதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் பலர் காயம் அடைந்தனர்.

மாக்டெபர்க் நகரில் இருந்து ஹால்பெர்ஸ்டேட் நகருக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. கிழக்கு ஜெர்மனியில் உள்ள சல்சோனிக்கும் அன்ஹால்ட் நகருக்கும் இடையே சென்ற போது இதன் மீது சரக்கு ரயில் ஒன்று பயங்கரமாக மோதியது. இதை தொடர்ந்து ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தடைபட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜெர்மனியில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதல்: 10 பேர் பலி"

கருத்துரையிடுக