31 ஜன., 2011

2014-ல் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும்

ஜன.31:ஐவரிகோஸ்ட் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களால், கோகோ பீன்ஸ் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இதனால் 2014-ல் உலகில் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சாக்லேட் தயாரிக்க முக்கியமான பொருள் கோகோ. கோகோ பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் கோகோ தான் சாக்லேட்டின் இன்றியமையாத மூலதனப் பொருள்.

உலகளவில் விளைவிக்கப்படும் கோகோ பீன்ஸில் பாதி ஐவரிகோஸ்ட் நாட்டில் இருந்து தான் பெறப்படுகிறது. தற்பொழுது அந்நாட்டு அரசியலில் சிக்கல்கள் உள்ளன. இதனால் விவசாயிகள் கோகோ பீன்ஸ் தயாரிப்பை பாதியளவாக குறைத்துள்ளன. பலர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். விளைவிக்கப்படும் சிறிதளவு கோகோவையும் கானா நாட்டிற்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கின்றனர்.

சர்வதேச நாடுகளுக்கு கோகோ பீன்ஸை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அதிபர் அலஸ்சேன் குவட்டாரா தடை விதித்துள்ளார். இதன் எதிரொலியாக நடப்பு மாதத்தில் மட்டும் கோகோ விலை 10 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "2014-ல் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும்"

கருத்துரையிடுக