31 ஜன., 2011

தெற்கு சூடானுக்கு சுதந்திரம்: 99.57 சதவீத மக்கள் ஆதரவு

கார்த்தூம்,ஜன:தெற்கு சூடானில் நடந்த மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் சுதந்திர நாடாக தெற்கு சூடான் மாறுவதற்கு 99.57 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

முதன் முதலாக வெளியாகியுள்ள முழுமையான முடிவுகளின் அடிப்படையில் விருப்ப வாக்கெடுப்பு கமிட்டி இதனை தெரிவித்துள்ளது.

வாக்களிப்பில் கலந்துக்கொண்ட வாக்காளர்களில் 99.57 சதவீதம் பேர் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக கமிட்டி கூறுகிறது.

தெற்கு சூடான் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்பது வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்திலேயே தெரியவந்தது. இருபது ஆண்டுகளாக தொடர்ந்த தெற்கு-வடக்கு சூடான் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர 2005 ஆம் ஆண்டு மேற்கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நடத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்பட்டது. மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் முடிவை அங்கீகரிப்பதாக ஏற்கனவே சூடான் அதிபர் உமருல் பஷீர் தெரிவித்திருந்தார்.

வாக்கெடுப்பின் முடிவு அங்கீகரிக்கப்படுவதால் அடுத்த ஜூலை மாதம் 9-ஆம் தேதி தெற்கு சூடான் சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படும் எனக் கருதப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தெற்கு சூடானுக்கு சுதந்திரம்: 99.57 சதவீத மக்கள் ஆதரவு"

கருத்துரையிடுக